செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By

ரிஷபம்: ஐப்பசி மாத ராசி பலன்கள்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்): சாந்தமான குணம் இருந்தாலும் கோபம் வந்தால் கட்டுப்படுத்த முடியாத இயல்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே! இந்த மாதம் எதிர்பாராத பிரச்சினைகள், வம்பு வழக்குகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

மறைமுக எதிர்ப்புகளும் அதிகரிக்கும் என்றாலும், எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள்.
 
குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவி இடையே கருத்துவேறுபாடுகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் முடிந்தவரை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே அனுகூலமானப்பலனைப் பெறமுடியும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தொடர் முயற்சிகளுக்குப் பின்பே சாதகப்பலன் உண்டாகும்.
 
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குப் போட்டிகள் அதிகரிக்கும். எந்தவொரு புதிய முயற்சியிலும் வெற்றிகளை அடைவதில் தடைகள் ஏற்படும். அபிவிருத்திக் குறைவதால் ஆர்டர்களும் குறையும். வங்கிக் கடன்களைத் திருப்பிச்செலுத்த நெருக்கடி ஏற்படும்.
 
உத்தியோகஸ்தர்களுக்கு அதிகாரிகளின் கெடுபிடிகளால் வேலைப்பளு அதிகரிக்கும். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புக் குறைவாக இருக்கும். நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவிகளும் பிறர் ஏற்படுத்தும் பிரச்சினைகளால் தாமதப்படும்.
 
பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகள் ஏற்படும். நினைத்த காரியங்களை நிறைவேற்ற முடியாமல் எல்லாவகையிலும் நெருக்கடிகள் நிலவும். பணவரவுகளிலும் தடைகள் நிலவினாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தி ஆகும்.
 
அரசியல்வாதிகளின் பெயர், புகழுக்கு களங்கங்கள் உண்டாகும். உடனிருப்பவர்களே வீண்பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. எதிர்பாராத பயணங்களால் அனுகூலம் ஏற்பட்டு மனநிம்மதி உண்டாகும். அலைச்சல்கள் அதிகரிக்கும்.
 
கலைத்துறையினருக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகள் தடைபடும். தொழிலில் போட்டிகள் அதிகரித்து உங்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பிற கலைஞர்கள் தட்டிச் செல்வார்கள்.
 
மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சகவாசம் உங்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி விடும். எதிர்பார்க்கும் அரசு உதவிகள்  கிடைப்பதில் தாமதம் ஏற்படும். விளையாட்டுப்போட்டிகளில் ஈடுபடும்போது கவனம் தேவை.
 
கார்த்திகை - 2, 3, 4: இந்த மாதம் உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் இருப்பது நல்லது. பணம் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபடும் போது கவனத்துடன் இருப்பது நல்லது. வாழ்க்கை தரம் உயரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எல்லாவற்றிலும் மனகவலை ஏற்படும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை.
 
ரோகினி: இந்த மாதம் தாயின் உடல்நிலையில் கவனம் அவசியம்.  திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எதிர்பாராத செலவு உண்டாகும். மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல்நலத்தில் கவனம் தேவை.
 
மிருகசீரிஷம் - 1, 2: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் கவனமாக இருப்பது  லாபம் அதிகரிக்க செய்யும். பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.
 
பரிகாரம்:  ஆதிபராசக்தியை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி கிடைக்கும்.
 
அதிர்ஷ்ட தினங்கள்: Nov 4, 5
 
சந்திராஷ்டம தினங்கள்: Nov 11, 12, 13.